Skip to main content

வெளியாகிறது 'வலிமை' முதல் பாடல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

bfxnfdxn

 

'நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாகத் தடைபட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, ஒரு சண்டைக்காட்சியைத் தவிர்த்து எஞ்சிய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ளது.

 

vnvjgk

 

மோஷன் போஸ்டர் வடிவில் கடந்த மாதத்தின் மத்தியில் வெளியிடப்பட்ட ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், ‘வலிமை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று (02.08.2021) இரவு 10 மணிக்குப் பிறகு வெளியாகவுள்ளதாகக் கூறப்பட்டது. படக்குழு தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ''‘வலிமை' முதல் சிங்கிள் பாடலுக்குத் தயாராக இருங்கள்" என ட்வீட் செய்து பாடல் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். யுவன் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை இயக்குநர், பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அஜித் படக்குழு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Complaint against Ajith's valimai film crew in the commissioner's office

 

இயக்குநர் அ.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'வலிமை'. அப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹியூமா குரேஷி நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா நடித்திருந்தார். இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்தது. 

 

இப்படம் வெளியாகி ஒரு வருடத்தை கடக்கவுள்ள நிலையில், ராஜேஷ் ராஜா என்ற குறும்பட இயக்குநர், ‘வலிமை’ படக்குழு மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். வலிமை படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள், 2019 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான 'தங்க சங்கிலி' என்ற குறும்படத்தில் இடம்பெற்ற 10 காட்சிகள் போல் உள்ளதாகக் கூறியுள்ளார்.  

 

மேலும், ராஜேஷ் ராஜா இதற்கு முன்பு அ.வினோத்தை சந்திக்க பலமுறை முயற்சித்தும், அவரை சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் தனது பிரச்சினைக்கு தீர்வு காண இறுதியாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை அணுகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

 

Next Story

வலிமை பட விவகாரம்; 5 மாதத்திற்கு பிறகு நடந்த அதிரடி கைது

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

police arrested the person who threw petrol bomb screening valimai theatre

 

இயக்குநர் எச். வினோத் - அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் 'ஏகே 61'. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

ad

 

இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் அஜித் நடித்த வலிமை படம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து வெளியான அஜித் படம் என்பதால், அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் கட்டவுட்டிற்கு பால் ஊற்றியும் திரையரங்கில் வலிமையை கொண்டாடி  தீர்த்தனர்.  அந்த நேரத்தில் கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் வலிமை படம் ஓடிக்கொண்டிருந்த கங்கா யமுனா திரையரங்கு மீது இருசக்கரத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பித்துச் சென்றனர். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக கோவை காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பித்துச் சென்றவரை தேடி வந்தனர். 

 

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு காரணமான சிவா என்பவரை 5 மாதம் கழித்து காட்டூர் போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். சிவா சென்னை வடபழனியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சென்னை விரைந்த காட்டூர் போலீஸ் வடபழனி போலீசாரின் உதவியுடன் சிவாவை கைது செய்து கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.