ajith

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், ஒரேயொரு கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மட்டும் எஞ்சியுள்ளது. இந்தக் காட்சியை ஸ்பெயினில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதும் மீண்டும் வேகமெடுத்துள்ள கரோனா பரவலால், பல நாடுகள் பிற நாட்டினர் வருகைக்கு தடை விதித்துள்ளன. இதனால், ஸ்பெயினில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

Advertisment

தற்போதைய நிலைமையை கவனத்தில் எடுத்துள்ள படக்குழு, எஞ்சியுள்ள படப்பிடிப்பையும் இந்தியாவிலேயே நடத்தி படப்பிடிப்பை நிறைவு செய்துவிடலாமா என்ற யோசனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது, வலிமை படத்திற்கான பின்னணி இசை உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அஜித்தின் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.