ரசிகர்களுக்குப் புத்தாண்டு விருந்தளிக்கும் அஜித், விஜய் !

valimai and beast update release on new year 2022

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாபடத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் க்ளிம்பஸ், மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றநிலையில் வலிமை படத்தின் ட்ரைலரை படக்குழு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .

இதனிடையே நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர்.

ACTOR AJITHKUMAR actor vijay Beast valimai
இதையும் படியுங்கள்
Subscribe