ADVERTISEMENT

'நாங்க வேற மாரி' வெளியான ‘வலிமை’ படத்தின் பாடல்!

10:55 PM Aug 02, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாகத் தடைபட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, இன்னும் 10 நாட்களில் படத்தை நிறைவு செய்ய உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்கள். மோஷன் போஸ்டர் வடிவில் கடந்த மாதத்தின் மத்தியில் வெளியிடப்பட்ட ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், ‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என்று காலை முதலே தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள "நாங்க வேற மாரி" பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT