/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/171_27.jpg)
இந்திய சினிமாவில் பல பயோ-பிக் படங்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது படங்களாகவும், வெப் சீரிஸ்களாகவும் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழக்கையைத் தழுவி படங்கள் எடுக்கப்பட்டன.
அந்த வரிசையில் பாஜகவின் மூத்தத்தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கியுள்ளார். இப்படத்தில் வாஜ்பாய் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதிநடித்துள்ளார். இப்படத்தை பானுஷாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியானது.
மேலும், படத்தை இந்த ஆண்டு வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்படம்2024 ஜனவரி 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ‘மெயின் அதல் ஹூன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலர் நாளை வெளியாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)