Advertisment

"வைரமுத்துவின் ஆசான் பிறந்தநாள் இன்று!" - வைரமுத்து நெகிழ்ச்சி!

kgigigigiyg

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 98வது பிறந்தநாள் இன்று (03.06.2021) கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞரின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்ட நிலையில், பிரபலங்கள் பலரும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில்,கவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...

Advertisment

"ஜூன் 3

கலைஞர் பிறந்தநாள்

தமிழுக்கு

ஏடு திறந்தநாள்

தமிழர்க்குச்

சூடு பிறந்தநாள்

பகுத்தறிவுக்குப்

பிள்ளை பிறந்தநாள்

பழைமை லோகம்

தள்ளிக் களைந்தநாள்

மேடை மொழிக்கு

மீசை முளைத்தநாள்

வெள்ளித் திரையில்

வீரம் விளைத்தநாள்

வள்ளுவ அய்யனை

வையம் அறிந்தநாள்

வைரமுத்துவின்

ஆசான் பிறந்தநாள்" என பதிவிட்டுள்ளார்.

Vairamuthu kavignar vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe