Advertisment

"கண்களின் கலவரத்தில் காணாமல் போனேன்" - பிரபல நடிகைக்கு வைரமுத்து வாழ்த்து

vairamuthu wishes kareena kapoor

Advertisment

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பாடலாசிரியர் வைரமுத்து, அதில் சமூகப் பிரச்சனைகளுக்கு கருத்துகளையும், தனது அடுத்த படத்தின் அப்டேட்டுகள் மற்றும் திரை அனுபவங்களையும், அவ்வப்போது தான் பார்த்த திரைப்படங்கள் பற்றியும் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை கரீனா கபூரை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று ஒரேமூச்சில் பார்த்த படம் ஜானே ஜான். கணவன் கயவன் பெண் குழந்தையோடு தப்பித்து வாழும் கரீனா கபூரை மீண்டும் உறவாடித் துரத்துகிறது. அந்த உரிமைப் பேய் தாயும் மகளும் தப்பிக்கும் போராட்டத்தில் அவன் கொல்லப்படுகிறான். பிறகுதான் தொடங்குகிறது. புத்தி பொத்தி விளையாடும் அந்தத் திகில் திருவிழா, தர்க்கம் தப்பாத திரைக்கதை. உங்கள் கண்களின் கலவரத்தில் காணாமல் போனேன் கரீனா.வங்காள விரிகுடாவிலிருந்து வாழ்த்துகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

வைரமுத்து தற்போது குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் 2, பாலா இயக்கும் வணங்கான், தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' உள்ளிட்ட சில படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

kareena kapoor Vairamuthu
இதையும் படியுங்கள்
Subscribe