/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/367_0.jpg)
இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கியுள்ளார்.. இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும்பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வரும் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தமிழில் வசனம் மற்றும் பாடல்களைகவிஞர் வைரமுத்துவின் மகனும், பாடலாசிரியருமானமதன் கார்க்கி எழுதியுள்ளார்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தன் மகனுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,
"மகனே மதன்கார்க்கி!
RRR - திரைப்படத்தில்
நீ உரையாடலும் பாடலும்
தீட்டியிருப்பது மகிழ்ச்சி
பெரும்படைப்பில்
பங்குபெறுவது பெருமிதம்
ஓர்
அனுபவத்தை மறக்காதே!
ஒரு படைப்பில்
உழைப்பை நிறைவாகக் கொடு
வெற்றியில் குறைவாக எடு
ராஜமெளலிக்கு
என் வாழ்த்தினைச் சொல்
உயர உயர
மண்பார்த்து நட.." எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)