Advertisment

"நீ சொல்லச் சொல்லப் பரவசமானேன் மகளே" - பிரபல நடிகையை பாராட்டிய வைரமுத்து

vairamuthu wishes actress samyuktha menon

Advertisment

பிரபல மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் தமிழில் தனுஷின் 'வாத்தி' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இப்படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் 'பூமராங்' என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ஒரு நிகழ்ச்சியில் தனக்கு வைரமுத்து பாடல் வரிகளில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் மிகவும் பிடிக்கும் என சம்யுக்தா மேனன் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், வைரமுத்து எழுதிய பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம். வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் உள்ளிட்ட சில வரிகளை தனக்கு பிடிக்கும் என பேசியுள்ளார்.

இந்நிலையில் வைரமுத்து இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சம்யுக்தா மேனனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "மலையாளம் நனைந்த தமிழில் என் பாட்டு வரிகளை நீ சொல்லச் சொல்லப் பரவசமானேன் மகளே. தமிழும் மலையாளமும் உறவு மொழிகள். நாம் கலையால் ஒன்றுபடுவோம்; காலத்தை வென்றுவிடுவோம்." என குறிப்பிட்டுள்ளார்.

Samyuktha Menon Vairamuthu
இதையும் படியுங்கள்
Subscribe