2019 ஆம் ஆண்டு இன்றுடன் நிறைவு பெற்று 2020 ஆம் ஆண்டு தொடங்குவதையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எல்லா நாடுகளுக்கும் ஒரே ஒளி சூரியன்
எல்லா மக்களுக்கும் ஒரே மொழி சத்தியம்
சத்தியம் தரும் வெற்றியே நித்தியம்
தடைகளை உடை, தைரியம் படை
வீரம் உன் கொடை, வெற்றியே விடை
பத்தாண்டில் சாதிப்பதை புத்தாண்டில் சாதிப்போம்
வாழுங்கள், வாழ்த்துகள்...” என்று கூறியுள்ளார்.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/Hl8-IP0PQmQ.jpg?itok=v1kWsriB","video_url":"