Advertisment

"சில நேரங்களில் ஆணினும் மேலானவள் மற்றபடி..." வைரலாகும் வைரமுத்துவின் பதிவு 

vairamuthu tweet about womens

Advertisment

உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி பெண்கள் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில்இன்று கொண்டாடப்பட்டு வரும் மகளிர் தினத்திற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

"கடவுளாக்கி

ஒதுக்குவதுமில்லை

அடிமையாக்கி

அடக்குவதுமில்லை

சில நேரங்களில்

ஆணினும் மேலானவள்

மற்றபடி நிகரானவள்

உன் தியாகத்தை -

திண்மையை -

கற்றுக்கொள்ளாமலே

கழிகிறது ஆண்கூட்டம்

நீ இல்லையேல்

ஈர்ப்புமில்லை;

காப்புமில்லை

எப்போதும்போல்

மகளிர் தினத்திலும்

மதிக்கிறேன் பெண்ணே!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நடிகர் சூரி தனது மகளுடன் வீடியோ வெளியிட்டு மகளிர் தின வாழ்த்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

Advertisment

happy womens day kavignar vairamuthu
இதையும் படியுங்கள்
Subscribe