vairamuthu tweet about russia ukraine issue

Advertisment

ரஷ்யா, உக்ரைன் மீது ஒருவாரமாக கடும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. இந்த சூழலில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

அந்தவகையில் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து போரை நிறுத்துமாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

"போரை நிறுத்துங்கள் புதின்

மில்லி மீட்டராய்

வளர்ந்த உலகம்

மீட்டர் மீட்டராய்ச் சரியும்

கரும்புகை

வான் விழுங்கும்

பகலை

இருள் குடிக்கும்

கடல்கள் தீப்பிடிக்கும்

குண்டு விழாத நாடுகளிலும்

ஏழைகளின்

மண்பானை உடையும்

ஆயுதம்

மனிதனின் நாகரிகம்;

போர் அநாகரிகம்

போரை நிறுத்துங்கள் புதின்" எனக் குறிப்பிட்டுள்ளார்.