Advertisment

"வடமொழி ஆதிக்கத்தால் நாம் இழந்தது அதிகம்" - கவிஞர் வைரமுத்து ட்வீட்

vairamuthu tweet about hindi language

டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது, "அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஹிந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்" எனப் பேசியிருந்தார். இவரின்பேச்சுக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

Advertisment

"வடக்கே வாழப்போன தமிழர்

இந்தி கற்கலாம்

தெற்கே வாழவரும் வடவர்

தமிழ் கற்கலாம்

மொழி என்பது

தேவை சார்ந்ததே தவிர

திணிப்பு சார்ந்ததல்ல

வடமொழி ஆதிக்கத்தால்

நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம்

இதற்குமேலும் இந்தியா?

தாங்குமா இந்தியா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tamil language hindi language kavignar vairamuthu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe