Advertisment

"சிறுசிறு விமர்சனங்களைச் சிரச்சேதம் செய்துவிடுங்கள்" - கலைஞர் குறித்து வைரமுத்து

vairamuthu tribute kalaignar

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் விழா இன்று திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள கலைஞரின் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு உயர் அதிகாரிகள், சென்னை மேயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, கலைஞர் நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

Advertisment

"கலைஞர் நூற்றாண்டு

இது நல்ல தருணம்

அவரைக்

கட்சி வட்டம் தாண்டிக்

கழற்றியெடுங்கள்

மாமனித

நிலைகொடுங்கள்

சிறுசிறு விமர்சனங்களைச்

சிரச்சேதம் செய்துவிடுங்கள்

மக்கள் தமிழ் என்று

அவர் படைப்பை

இலக்கிய பீடம் ஏற்றுங்கள்

சுயமுன்னேற்றத்தின் பாடமாய்

அவர் வாழ்வைக்

கொண்டாடுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

kalaignar Vairamuthu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe