vairamuthu talk about vijay sethupathi maamanithan movie

Advertisment

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவது முறையாக சமீபத்தில் வெளியான படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகிடைத்தது. ரஜினிகாந்த். ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தை பாராட்டியிருந்தனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="58b251db-b58f-469b-b53f-65021f85a317" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_19.jpg" />

இந்நிலையில் மாமனிதன் படத்தை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

"அண்மையில்தான் பார்த்தேன்

மாமனிதன்

வாழ்வின்

கருத்த நிழலொன்று

திரையில் விழுந்திருக்கிறது

சாரம் இதுதான்:

சமூகத்தில்

மிருகங்கள் சில உள

ஆனால்

தெய்வங்கள் பலப் பல

சீனு ராமசாமி!

விஜய்சேதுபதி!

வாழ்த்துகிறேன்

கண்டால்

கண்ட இடத்தில்

உங்கள் தலைகோதிக் கொடுப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.