Advertisment

"கலைமேகங்கள் கூடிய தருணம்" - வீடியோ பகிர்ந்த வைரமுத்து

vairamuthu shared a video about thangar bachan movie

தமிழ் சினிமாவில் கிராமத்து பின்னணியில் அழுத்தமான கதைகளை பதிவு செய்யும் தங்கர் பச்சான் தற்போது 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' படத்தை இயக்கி வருகிறார். வீரசக்தி என்பவர் தயாரிக்கும் இப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, யோகி பாபு மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு வைரமுத்து வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கும்பகோணத்தில் தொடங்கியது.

Advertisment

இந்நிலையில் வைரமுத்து, இப்படத்தின் பாடல் உருவாக்கத்தின் போது நடந்த உரையாடலை ஒரு வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், "கருமேகங்கள் ஏன் கலைகின்றன படத்துக்குப் பாட்டமைக்க கலைமேகங்கள் கூடிய தருணம். தங்கர் பச்சான், ஜி.வி.பிரகாஷ், மற்றும் நான். மெட்டுக்குப் பாட்டெழுதினேன். அதில் சில காட்சிகள் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

GV prakash thangar bachan Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe