கமலின் சந்தேகத்தை தீர்த்து வைத்த வைரமுத்து

vairamuthu shared a experience in kamalhassan for anthi mazhai poligirathu song

வைரமுத்து தற்போது குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் 2, பாலா இயக்கும் வணங்கான் உள்ளிட்ட சில படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வைரமுத்து, அதில் சமூகப் பிரச்சனைகளுக்கு கருத்துகளையும், தனது அடுத்த படத்தின் அப்டேட்டுகள் மற்றும் திரை அனுபவங்களையும், அவ்வப்போது தான் பார்த்த திரைப்படங்கள் பற்றியும் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ராஜ பார்வை படத்தின் போது கமலுடன் உரையாடிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "அந்தி மழை பொழிகிறது எழுதிக்கொண்டிருந்த நேரம். கமல்ஹாசனுக்கும் எனக்கும்

நேர்ந்த உரையாடல்.

'சிப்பியில் தப்பிய நித்திலமே

நித்திலம் என்றால் என்ன?'

'முத்து'

'புரியுமா?'

'அறுபதுகளில் புரிந்தது

எண்பதுகளில் புரியாதா?'

'அப்போதே வந்திருக்கிறதா;

எந்தப் பாட்டில்?'

'எம்.ஜி.ஆர் பாட்டில்:

சின்ன இடையே சித்திரமே

சிரிக்கும் காதல் நித்திலமே'

(சிறிய சிந்தனைக்குப் பிறகு)

'சரி சரி'

கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும்

தமிழைக் காப்பாற்றினார்கள்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் இரு பாடல்களின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

ACTOR KAMAL HASSHAN Vairamuthu
இதையும் படியுங்கள்
Subscribe