vairamuthu

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலையால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் முழு ஊரடங்கு வரும் திங்கள்முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

Advertisment

இந்த நிலையில், திருமண மண்டபங்களை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்ற அரசு முடிவெடுத்தால் தன்னுடைய திருமண மண்டபத்தைத் தந்து தன்னால் உதவ முடியும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றுவதற்குத் தமிழக அரசு முடிவெடுத்தால், முதல் மண்டபமாக எங்கள் 'பொன்மணி மாளிகை' திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம். மணம் நிகழ்வதைவிட குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment