Advertisment

“இந்தியாவை ஓர் ஒற்றை மொழிமட்டும் கட்டியாள முடியுமா?” - கேள்வியெழுப்பும் கவிஞர் வைரமுத்து

Vairamuthu question Tweet 

Advertisment

வட இந்தியாக்களில் தமிழர்கள் பயணிக்கும் போது இந்தி மொழி தான் தேசிய மொழி என்ற திணிப்பினை இராணுவத்தினர், காவல் அதிகாரிகள் போன்றவர்கள் நமக்கு சொல்வார்கள். அது தமிழர்களிடையே மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தும்.இது அடிக்கடி நிகழும் சம்பவமாகும். சமீபத்தில் கோவா விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் இந்தி மொழிதான் தேசிய மொழி என தமிழ்நாட்டு பெண் ஒருவரிடம் வாதிட்ட சம்பவம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது “இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா? இந்தியா என்ற நாடு இந்தி என்ற சொல்லடியில்தான் பிறந்ததா? எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழியென்ன இந்தியக் கரன்சியா? இந்தி பேசும் மாநிலங்களிலேயே இந்தி கல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வடநாட்டுச் சகோதரர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்தால் தமிழ் தெரியுமா என்று தெள்ளு தமிழ் மக்கள் எள்ளியதுண்டா? சிறுநாடுகளும்கூட ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சிமொழிகளால் இயங்கும்போது இந்தியாவை ஓர் ஒற்றை மொழிமட்டும் கட்டியாள முடியுமா? 22 பட்டியல் மொழிகளும் ஆட்சிமொழி ஆவதுதான் வினாத் தொடுத்த காவலர்க்கும் விடைசொன்ன தமிழச்சிக்குமான ஒரே தீர்வு” என்றிருக்கிறார்.

GOA GOVERNMENT kavignar vairamuthu
இதையும் படியுங்கள்
Subscribe