Advertisment

"இந்த விருது அவரது கலைப்பயணத்தின் முற்றுப்புள்ளி என்று கருதிவிட முடியாது" - வைரமுத்து

vgdxzdb

Advertisment

2019ஆம் ஆண்டுக்கான 'தாதாசாகேப் பால்கே' விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது. மத்திய சுற்றுச்சூழல் துறை, கனரக தொழில்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "2019ஆம் ஆண்டிற்கான 'தாதாசாகேப் பால்கே விருது' இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது. நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என அவரது பங்களிப்பு சிறப்பானது" என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

alt="gsgs" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="bb8535ae-06a7-47fc-81cc-3f84e3cee7a1" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/sulthan%20ad_8.png" />

ஏற்கனவே சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர், அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, லதா மங்கேஸ்வர், கன்னட நடிகர் ராஜ்குமார், அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு 'தாதாசாகேப் பால்கே விருது' வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை நடிகர் ரஜினிகாந்த் பெற்றிருக்கும் நிலையில், அவருக்குப் பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்தவகையில் கவிப்பேரரசு வைரமுத்து ரஜினிக்கு வாழ்த்து சொல்லி ட்வீட் செய்துள்ளார். அதில்...

"தாதா சாகேப் பால்கே விருதுபெறும்

ரஜினிக்கு என் வாழ்த்துக்கள்.

இந்த விருது

அவரது கலைப்பயணத்தின்

முற்றுப்புள்ளி என்று கருதிவிடமுடியாது.

அடுத்த சிகரம் அடைவதற்கான

ஆக்சிஜன் என்று கருத வேண்டும்;

அவர் கருதுவார்.." என பதிவிட்டுள்ளார்.

Vairamuthu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe