vairamuthu

கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, தற்போது 'நாட்படு தேறல்' என்ற புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். அதாவது, ‘நாட்படு தேறல்’ எனும் தலைப்பின்கீழ் 100 இசையமைப்பாளர்களின் இசையில், 100 பாடகர்களின் குரலில், 100 இயக்குநர்களின் இயக்கத்தில், வைரமுத்துவின் வரிகளில் 100 பாடல்கள் உருவாகவுள்ளன. இப்பாடல்களை வாரத்திற்கு ஒரு பாடல் என 100 வாரங்களுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ள வைரமுத்து, கடந்த வாரம் முதல் இதனைத் தொடங்கினார். முதல் பாடலாக 'நாக்குச் செவந்தவரே...' என்ற பாடல் கடந்த ஞாயிறன்று கலைஞர் தொலைக்காட்சியிலும் இசையருவி தொலைக்காட்சியிலும் வெளியானது.

Advertisment

இந்த நிலையில், இரண்டாவது பாடலாக 'இந்த இரவு தீர்வதற்குள்ளே...' என்ற பாடல் நாளை (25.04.2021) வெளியாகவுள்ளது. இப்பாடலுக்கான வைரமுத்துவின் வரிகளுக்கு அனில் ஸ்ரீநிவாசன் இசை கொடுக்க, ஆர்.பி.ஷ்ரவன் தன்னுடைய குரலால் உயிர் கொடுத்துள்ளார். இப்பாடலுக்கான காணொளியை அருள்.எஸ். இயக்கியுள்ளார்.

Advertisment