vairamuthu mourns singer manikka vinayagam

சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த பாடகர் மாணிக்க விநாயகம் (73) திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று(26.12.2021)உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார். அதேபோல் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

Advertisment

பரதநாட்டிய ஆசிரியரான வழுவூர் ராமையா பிள்ளையின் மகனான மாணிக்க விநாயகம் சினிமா மட்டுமல்லாது பக்தி பாடல்கள் பாடியுள்ளதோடு பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார். மாணிக்க விநாயகத்தின் உடல் திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரின்மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.அந்தவகையில் பாடகர் மாணிக்க விநாயகம் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "

இசை மரபிலே வந்த

மாணிக்க விநாயகம்

மறைந்துற்றார்

"விடைகொடு எங்கள் நாடே"

என்று பாடியவர் விடைபெற்றார்

நல்ல கலைஞன் - நல்ல மனிதன்

என்று இரண்டும் கூடிய

அபூர்வம் அவர்

குடும்பத்திற்கு

நாம் ஆறுதல் சொல்லலாம்

எவர் சொல்வது இசைக்கு...?