vairamuthu keeravaani movie update

Advertisment

1993ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’ஜென்டில்மேன்'. இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாகத் தயாராகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் 'ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்' சார்பாக இப்படத்தைத் தயாரிக்கிறார். கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="bfb54c86-a381-4ff7-ab6d-30a4d0aba966" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%20%281%29_5.jpg" />

தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்க இசையமைப்பாளராக ஆஸ்கர் வென்ற கீரவாணி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இப்படத்துக்கு வைரமுத்து பாடலாசிரியராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "கொச்சியில் இருக்கிறேன். ஜென்டில்மேன் 2 படத்திற்குப் பாட்டெழுதுகிறேன். ஆஸ்கர் விருதுக்குப் பிறகு கீரவாணி(மரகதமணி) இசையமைக்கும் முதல் தமிழ்ப்படம் அதிகாலைப் பறவைகளாய்ப் பாடிக்கொண்டிருக்கிறோம் கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். குஞ்சுமோன் படத்துக்குக் குறையிருக்குமா பாட்டுக்கு?. விரைவில் அர்ப்பணிக்கிறோம் நாட்டுக்கு" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment