ghsh

Advertisment

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியக் கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்திலும் நடித்துள்ள படம் ‘க/பெ ரணசிங்கம்’.

இந்தப் படத்தை பெ.விருமாண்டி இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ரங்கராஜ் பாண்டே, இந்தப் படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘க/பெ ரணசிங்கம்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை பார்த்த கவிப்பேரரசு வைரமுத்து பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில்..

''நல்ல கலைகளெல்லாம்

மனிதகுலத்தின் வலியிலிருந்து வழிந்தவை.

இந்தப் படம் இன்னொரு வலி.

இது வெற்றிபெறக் கூடும் என்று

என் நம்பிக்கை நரம்பு துடிக்கிறது.

பார்ப்போம்...''

எனப் பதிவிட்டுள்ளார்.