vairamuthu

இந்திய திரையுலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக இந்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த விருதானது கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்தியாவில் நிலவிய கரோனா பெருந்தொற்று காரணமாக இந்த விழா நடைபெறாமலேயே இருந்தது.

Advertisment

இந்த நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 67ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

Advertisment

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துத் தெரிவித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம். கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.