gdg

Advertisment

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு ஊரடங்கை வரும் மே 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தளப் பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தொடர்ந்து தன் கவிதைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கவிப்பேரரசு வைரமுத்து தற்போது கரோனா தாக்கம் குறித்து கவிதை ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில்....

''நெடுஞ்சாலைகள்

பாதசாரிகளுக்கல்ல

தண்டவாளங்கள்

தற்கொலைக்கல்ல

விஷம்

பசிக்கு உணவல்ல

சலுகை

அறிவிப்புக்கல்ல

கவிதை

கொண்டாட்டத்திற்கல்ல'' என பதிவிட்டுள்ளார்.