விழுப்புரத்தை சேர்ந்த லூர்துராஜ் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவர் ‘கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்களில் புதுக்கவிதைக் கூறுகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.
அந்த ஆட்டோ ஓட்டுநரை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார் பாடலாசிரியர் வைரமுத்து. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வியந்து போனேன்; ஆட்டோ ஓட்டுநர் கூட்டத்தில் ஓர் அதிசயம்" என குறிப்பிட்டு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில், ஆட்டோ ஓட்டுநருக்கு சால்வை அணிந்து மகிழ்ந்தார் வைரமுத்து. பின்பு அவரிடம் 'இரக்கமுள்ள மனசுக்காரன்டா... நான் டாக்டர் பட்டம் வாங்க போரண்டா...' என பாடி அந்த ஆட்டோ ஓட்டுநரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் உயர்கல்வி அல்லது கல்லூரியில் அவருக்கு இடம் வாங்கி கொடுக்க அருகில் இருந்தவரிடம் அறிவுறுத்தினார்.