vairamuthu condolences thanjavur incident

தஞ்சை மாவட்டம், களிமேடு கிராமத்தில் அப்பர் கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர், தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சிதலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில்கவிஞர் வைரமுத்து இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

Advertisment

"களிமேட்டுத் தேர்த் திருவிழாவில்

தஞ்சைத் தமிழர்களைத்

தாக்கிய மின்சாரம்

நெஞ்சைத் தாக்குகிறது

இறந்தார் குடும்பத்துக்கு

என் ஆழ்ந்த இரங்கல்

அய்யகோ மரணமே!

உனக்குப்

பார்வையுமில்லை;

பக்தியுமில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.