Advertisment

“சதை அழிவுறும், அவர் கதை அழுவுறாது...” -வைரமுத்து ட்வீட்! 

vairamuthu

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி தன்னுடைய 80வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

Advertisment

மயிலாடுதுறையில் பிறந்த இவர், தமிழ் எழுத்துலகில் பிரபலமானவர். 1968ம் ஆண்டு இவருடைய 'சாயாவனம்' என்ற புதினம் வெளிவந்ததில் இருந்து பலரால் அறியப்பட்ட தமிழ் எழுத்தாளரானார்.

Advertisment

1997 ஆண்டு இவர் எழுதிய ‘விசாரணை கமிஷன்’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார். இவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கு முன்னர் அனுமதிப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.15 மணிக்கு காலமானார்.

இந்நிலையில் மறைந்த எழுத்தாளருக்கு கவிஞர்வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில்,

“மறைந்தாரே சா.கந்தசாமி!

‘சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே!

தன்மானம் - தன்முனைப்பு

தனி அடையாளமென்று மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ!

சதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது.” என்று பதிவிட்டுள்ளார்.

Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe