/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/154_18.jpg)
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான நிக் ஆட்ர்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி சிட்டிசன், ரேணிகுண்டா, காளை உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். நடிகர் அஜித்தை மட்டும் வைத்து ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு ஆகிய பல படங்களைத் தயாரித்துள்ளார். புற்றுநோய் காரணமாக கடந்த 8 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், "நண்பா! நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி! மறைந்துவிட்டாயா? அஜித்தை வைத்து நீ தயாரித்த வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா வரலாறு ஆகிய 7 படங்களுக்கும் என்னையே எழுத வைத்தாயே. தமிழ்க் காதலா! காசோலைகள் வந்த இடத்திலிருந்து சாவோலையா? கலங்குகிறேன்; கலையுலகம் உன் பேர் சொல்லும்" எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)