
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடந்த போராட்டத்தின் போது போலிசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த பல்வேறு அரசியல் தரப்பினரும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்துக்கு ரஜினி, கமல், உட்பட பல திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், வீடியோ பதிவாகவும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கவிஞர் வைரமுத்துவும் கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்.... "ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என்று மாநில அரசும், பெட்ரோல் விலை பெரிதும் குறைக்கப்பட்டது என்று மத்திய அரசும், போராட்டம் முடிவுக்கு வந்தது என்று பொதுமக்களும் அறிவிப்பதுதான் நாடு விரும்பும் நல்ல முடிவுகளாகும்" என பதிவிட்டுள்ளார்.