Advertisment

பாரதிராஜாவிற்கு என்ன பிரச்சனை - செய்தியாளர்களிடம் விளக்கமளித்த வைரமுத்து

vairamuthu clarifying about bharathiraja health condition

இயக்குநர் பாரதிராஜா சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில் பாரதிராஜாவை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துள்ளார் வைரமுத்து. பின்பு செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, "இயக்குநர் பாரதிராஜா நலமோடு இருக்கிறார். நாளும் நாளும் தேறி வருகிறார். மருத்துவர்கள் நல்ல சிகிச்சையை வழங்கி வருகிறார்கள். அச்சப்படுவதற்கு ஆதாரம் இல்லை. வதந்தி பரப்புவதற்கு வாய்ப்பே இல்லை. நெஞ்சில் கொஞ்சம் சலி இருக்கிறது. அது விரைவில் சரி செய்யப்படும் என்று மருத்துவர் குழு தெரிவித்திருக்கிறது. நுரையீரலில் சற்றே நீர் சேந்திருக்கிறது. அதுவும் சரி செய்யப்படும் என்று உறுதி தரப்பட்டிருக்கிறது. அதனால் நன்றாக பேசுகிறார், அடையாளம் கண்டுகொள்கிறார், நல்ல நிலையில் இருக்கிறார். நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். பாரதிராஜா மீண்டும் மீண்டு வருவார் கலை உலகை ஆண்டு வருவார்" எனப் பேசியுள்ளார். அப்போது சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட சிலர் உடனிருந்தனர்.

Advertisment

bharathiraja Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe