Advertisment

“படம் முடிவதற்குள் பனிக்கட்டி ஆகிவிடுகிறது ரத்தம்” - வைரமுத்து

vairamuthu about Society of the Snow

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பாடலாசிரியர் வைரமுத்து, அதில் சமூகப் பிரச்சனைகளுக்கு கருத்துகளையும்தனது அடுத்த படத்தின் அப்டேட்டுகளையும், அவ்வப்போது தான் பார்த்த திரைப்படங்கள் பற்றியும் பகிர்ந்து வருவார்.

Advertisment

அந்த வகையில், தற்போது சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ (Society of the Snow), என்ற ஸ்பேனிஷ் படம் குறித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஒரு ஸ்பானிஷ் படம் பார்த்தேன். ஒரு பனிமலையில் விழுந்து உடைகிறது விமானம். விமானத்தின் உடைந்த கூடே கூடாரமாய் உயிர் காக்கப் போராடுகிறார்கள். பிழைத்தவர்கள் பசியின் உச்சத்தில் இறந்த பயணிகளின் இறைச்சியை உண்ணுகிறார்கள். இறுதியில் எப்படி மீட்கப்பட்டார்கள் என்பது கதை. படம் முடிவதற்குள் பனிக்கட்டி ஆகிவிடுகிறது ரத்தம். இப்படி ஒற்றைப் பொருள் குறித்த படங்கள் தமிழில் எப்போது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

வைரமுத்து தற்போது குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் 2, பாலா இயக்கும் வணங்கான் உள்ளிட்ட சில படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe