Published on 25/11/2020 | Edited on 25/11/2020

தமிழகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் 'நிவர்' இன்று இரவு கரையை கடக்கவுள்ள நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில்...
"போ புயலே
போய்விடு
பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்
வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்
குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்
பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்
சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு
ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?" என வெளியிட்டுள்ளார்.