Advertisment

"நீட் என்பது தேர்வுமல்ல, தற்கொலை என்பது தீர்வுமல்ல" - வைரமுத்து வேதனை!

gjgjg

மதுரை தல்லாகுளம் பட்டாலியன் காவல் குடியிருப்பை சேர்ந்த காவல்துறை சப்- இன்ஸ்பெக்டர் முருகசுந்தரம் என்பவரின் மகளான ஜோதி துர்கா என்ற மாணவி நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மீண்டும் தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இறந்த மாணவிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

"ஓ!

மாணவ மகன்களே! மகள்களே!

நீட் என்பது தேர்வுமல்ல;

தற்கொலை என்பது தீர்வுமல்ல.

பிறக்கும் யாருக்கும் தங்களை

அழிக்கும் உரிமை இல்லை.

அழிக்க வேண்டியது அநீதியைத்தான்;

உயிர்களை அல்ல.

நீட் தேர்வு என்பது சமூக அநீதி;

முதலில் அதை அழிப்போம்.

நீங்கள் வாழப் பிறந்தவர்கள்.

#NEET #BanNEET" என கூறியுள்ளார்.

Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe