vairamuthu about iranian movie

Advertisment

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பாடலாசிரியர் வைரமுத்து,அதில் சமூகப் பிரச்சனைகளுக்கு கருத்துகளையும், தனது அடுத்த படத்தின் அப்டேட்டுகளையும், அவ்வப்போது தான் பார்த்த திரைப்படங்கள் பற்றியும் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில், ஓர் ஈரானியப் படம் பார்த்துள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தற்கொலைக்கு முடிவெடுத்த பிறகு தன்னை அடக்கம் செய்ய ஆள் தேடி அலைகிறான், ஒரு மத்திய கிழக்கு மனிதன். அவன் கடைசி ஆசைகேட்டுத் தெறித்தோடுகிறார்கள் மனிதர்கள். சாவின் விருப்பம் நிறைவேறியதா என்பது கதை. அடைக் கோழியின் பொறுமை இருந்தால் இந்தப் படம் ஓர் அனுபவம் ஆகலாம். டேஸ்ட் ஆஃப் ஜெர்ரி (Taste of Cherry)" என குறிப்பிட்டுள்ளார்.

வைரமுத்து தற்போது குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் 2, பாலா இயக்கும் வணங்கான், தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' உள்ளிட்ட சில படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

Advertisment