Advertisment

"குத்துப் பாட்டுகளுக்கு மத்தியில் முத்து பாடல்கள்" - வைரமுத்து

vairamuthu about gentleman 2 songs

1993 ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’ஜென்டில்மேன்'. இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாகத் தயாராகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் 'ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்' சார்பாக இப்படத்தைத் தயாரிக்கிறார். கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில், தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்க நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார். ஆஸ்கர் வென்ற கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில், வைரமுத்து அனைத்து பாடல்களுக்கும் வரிகள் எழுதியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (09.10.2023) சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது. தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சத்யா ஸ்டுடியோ தலைவர் டாக்டர்.குமார் ராஜேந்திரன், வைரமுத்து ஆகியோர் படப்பிடிப்பைத்தொடங்கி வைத்தனர். பின்பு மூன்று பேரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வைரமுத்து, "நிகழ் கால தனலடிக்கிற, எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்ட ஒரு தகவல் சொல்லக் கூடிய படமாக இந்தப் படம் விளங்கும் என நாங்கள் நம்புகிறோம். எல்லாவற்றையும் விட நான் மிகவும் ரசித்தது கீரவாணியின் இசை. ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி, இந்த படத்தில் 7 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். அந்த 7 பாடல்களையும் எழுதக் கூடிய வாய்ப்பை குஞ்சுமோன் எனக்கு வழங்கியிருக்கிறார்.

Advertisment

அத்தனை பாடல்களும் என் பாடல்கள் என்று சொல்வதை விட தமிழின் பாடல்கள், தமிழ் கொஞ்சுகிற பாடல்கள், தமிழை உயர்த்திப் பிடிக்கிற பாடல்கள். குத்துப் பாட்டுகளுக்கு மத்தியில் முத்துப் பாடல்கள் என்று சொல்லக்கூடிய வகையில் இந்தப் பாடல்கள் அமைந்திருக்கின்றன" என்றார்.

Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe