"ரத்தம் உறையும் குளிரிலும்..." விவசாயிகள் போராட்டம் குறித்து வைரமுத்து உருக்கம்!

vairamuthu

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியறுத்தி, நாட்டின் தலைநகரான டெல்லியில், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரு வார காலத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் போராட்டத்திற்கு, நாடு முழுவதும் ஆதரவு பெருகிவருகிறது. சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், எதிர்க்கட்சிகள் எனப் பலரும், தங்களது ஆதரவுக் கரத்தை நீட்டி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக, கவிஞர் வைரமுத்து உருக்கமான கவிதை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

"ரத்தம் உறையும் குளிரிலும்

சித்தம் உறையாத

விவசாயிகளின் போராட்டத்தைக்

கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன;

அதை நீளவிடக்கூடாது.

இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே மத்திய அரசும்

மனம் திறக்க வேண்டுமென்று

மக்கள் விரும்புகிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

kavignar vairamuthu
இதையும் படியுங்கள்
Subscribe