/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vairamuthu_1200x900.jpg)
1959ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்து இன்று எடுத்துக்கொண்டிருக்கும் இந்தியன் 2 வரை தொடர்ந்து 61 ஆண்டுகள் திரைத்துறையில் நடிப்பு, நடனம், பாடல், இயக்கம் என பல்வேறு சாதனைகள் படைத்து வரும் உலகநாயகன் கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து ஆகஸ்ட் 12ஆம் தேதியோடு 61 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதற்கு திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கமலுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், கவிப்பேரரசு வைரமுத்து கமல்ஹாசனுக்கு சமூகவலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்...
"பரமக்குடியின்
அருமைக் கலைஞன்
பிறப்பு சிவப்பு;
இருப்பு கறுப்பு.
மரபுகடந்த புதுக்கவிதை
புரிதல் கடிது;
புரிந்தால் இனிது.
ஆண்டுகள் அறுபது
காய்த்த பின்னும்
நனிகனி குலுங்கும் தனிவிருட்சம்.
கலைத்தாய் தன் நெற்றியில்
மாற்றி மாற்றிச் சூடுவது
திலகத்தையும் இவர் பெயரையும்
‘கலையாக் கலையே கமல்" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)