Advertisment

"அஜித் மாதிரி பண்ணணும்னா தனி தைரியம் வேணும்" - நடிகர் வைபவ்

Vaibhav opens up ajithkumar

அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ், அனகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பபூன். இதனையொட்டி இப்படத்தில் நடித்த வைபவ்வைநக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில்பபூன் படம் குறித்தும், நடிகர் அஜித் குறித்தும்வைபவ் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisment

அதில், “இந்த படம் ஊர்களில் மேடை நாடகத்தில் பபூன் வேஷம் போட்டு நடிக்கும் ஒரு இளைஞன் வருடத்தில் ஆறு மாதம்தான் வேலை பார்ப்பான், மீதமுள்ள ஆறு மாதம் வேலை இல்லாமல் இருப்பான். அந்த மாதிரி இருக்குறபையன் எப்படி கஷ்டப்பட்டு மேல வரணுன்னுநினைக்கும் போது, அரசியல் ரீதியாகவும், சமூக எதிரிகளாலும் அவன் சந்திக்கு பிரச்சனையைமையமாக வைத்து எடுக்கப்பட்டது. அத்துடன் படத்திற்கு ஏற்றவாறு கொஞ்சம் ஆக்சனுடன் சொல்லியிருக்கிறோம். கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும்" என்றார்.

Advertisment

இதனைதொடர்ந்து அஜித் குறித்து பேசிய வைபவ், "நான் அஜித் சார்கூடசேர்ந்து மங்காத்தா பண்ணோம். அஜித் சார் மாதிரி பண்றதுக்கு ஒரு தைரியம் வேணும். இவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்துகிட்டு நான் ட்ராவல்பண்ணுவேன்னு சொல்லி வாழ்க்கையை என்ஜாய் பண்ணிட்டு இருக்காரு. இது ஒரு தனி தைரியம் வேணும்" என்றார்.

ACTOR AJITHKUMAR vaibhav
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe