vaibhav about his chennai city gangster movie

பி. டி. ஜி யுனிவர்சல் தயாரிப்பில் வைபவ், அதுல்யா ரவி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’. விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இயக்கியுள்ள இப்படத்தில் மணிகண்டா ராஜேஷ், ஆனந்த்ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் வரும் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனையொட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. திரைப்பட குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisment

நிகழ்ச்சியில் வைபவ் பேசும்பொழுது, “இத்திரைப்படத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரு கலகலப்பான திரைப்படம். இயக்குநர்கள் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேஷவ் ஆகிய இருவரும் இத்திரைப்படத்தை சிறப்பாக கொடுத்துள்ளார்கள். தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் அமெரிக்காவில் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர். அவரது தொண்டு நிறுவனம் சார்பில் பல நல்ல விஷயங்களை செய்கிறார். வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ அவர்களுக்கும் மிக்க நன்றி. இமான், சக நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இத்திரைப்படம் துவக்கம் முதல் மிகவும் நகைச்சுவை விருந்தாக இருக்கும்.” என்றார்.

Advertisment