Advertisment

ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் - வாணி போஜன்! 

gdgbd

பிரபல ஓடிடி தளமான ஜீ ஃபையில் ‘லாக்கப்' ‘க / பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த 2021ம் வருடத்தில் ஜீ ஃபை தளத்தில் மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகள் தொடர்ந்து வரவிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடத்தின் அடுத்தப் படைப்பாக, வைபவ் - வாணி போஜன் நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை 'ஜீ ஃபை' தளம் வழங்குகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைப் பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். மங்கி மேன் கம்பெனி தயாரிக்கும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Advertisment

மேலும் இப்படம் குறித்து இயக்குநர் ராதாமோகன் கூறுகையில்,''ஓடிடியில் இது எனது முதல் படம். மிகச்சிறந்த முறையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கதாபாத்திரத்தின் தன்மையைப் புரிந்து அனைவரும் அற்புதமாக நடிக்கிறார்கள். வைபவ், வாணி போஜன், கருணாகரன் மற்றும் என் நண்பர் எம்.எஸ் பாஸ்கர் ஆகியோருடன் இப்படத்தில் கை கோர்ப்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி’' என்றார்.

Advertisment

alt="vdvdxv" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f7f852d9-7121-4104-b10b-e46733f0d6f3" height="346" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kalathil-santhipom-500x300-article-inside_32.jpg" width="577" />

நடிகர் வைபவ் கூறுகையில், ''லாக்கப்', 'டானா', 'கப்பல்' போன்ற படங்களுக்குப் பிறகு, மீண்டும் இப்படத்தின் மூலம் 'ZEE5' உடனான நட்பு தொடர்கிறது. இந்த நகைச்சுவை படத்தில் இதுவரை நான் ஏற்றிராத சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். குடும்பமாக அனைவரும் ரசித்துப் பார்க்கும்படி எடுக்கப்படும் இப்படத்தில் இயக்குநர் ராதாமோகன், வாணி போஜன், கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர் ஆகியோருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்’' என்றார்.

alt="vdzvbzx" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d710c1d8-b95f-4de3-af9f-275844030c50" height="350" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Trip-Article-inside-ad-500x300_6.jpg" width="584" />

நடிகை வாணி போஜன் கூறுகையில், ''ஜீ ஃபையின் ‘லாக்கப்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் வைபவ் உடன் இணைந்து நடிக்கிறேன். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட ஒரு படம். நகைச்சுவை மிகுந்த இப்படத்தில் பெண்கள், குறிப்பாக இல்லத்தரசிகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ராதாமோகன் சார், எம்.எஸ் பாஸ்கர் சார், கருணாகரன் ஆகியோருடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது'' என்றார்.

radha mohan vani bojan vaibav
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe