Advertisment

"வா மா...நீதான் என் தங்கச்சி" - தூய்மை பணியாளரிடம் அன்பை காட்டிய வடிவேலு

vadivelu visit bannari amman temple

வடிவேலு, நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகும் 'மாமன்னன்' படத்தில் நடிக்கிறார். இதனை தொடர்ந்து தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="16fd7c0a-995e-49f7-9e2f-73d47701ddd7" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-X-300-Viruman_5.jpg" />

Advertisment

இந்நிலையில் வடிவேலு ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் வடிவேலுக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. வடிவேலுவை காண, கோவிலுக்கு வந்த பக்தர்களும் பணியாளர்களும் சூழ்ந்துகொண்டனர். பின்பு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது ஒரு பெண் தூய்மை பணியாளர் வடிவேலுவின் காலில் விழுந்து வணங்கினார். அந்த பெண்ணை தூக்கிவிட்டு "வா மா...நீதான் என் தங்கச்சி. நம்ம ரெண்டு பேரும் ஒன்னு. நீயும் நானும் ஒரே மண்ணு" என கலகலப்பாக கூறிய படி தோளில் கைபோட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார் வடிவேலு.

actor Vadivelu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe