Advertisment

வடிவேலு தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

vadivelu singamuthu case

Advertisment

வடிவேலும் சிங்கமுத்துவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரு கட்டத்திலிருந்து இணைந்து நடிக்காமல் இருந்தனர். மேலும் தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய நிலத்தை தனக்கு வாங்கிக் கொடுத்ததாக சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் சிங்கமுத்துவுக்கு எதிராக மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார் வடிவேலு. சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிங்கமுத்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் என்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியுள்ளார். இது பொதுமக்கள் மற்றும் எனது ரசிகர்கள் மத்தியில் எனக்கு இருக்கும் நற்பெயரை களங்கப்படுத்தும் செயல்.

எனவே சிங்கமுத்து ரூ. 5 கோடியை எனக்கு நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் என்னைப்பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிங்கமுத்து இரண்டு வாரத்துக்குள் இந்த வழக்கு தொடர்பாகப் பதிலளிக்க வேண்டும், என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

MADRAS HIGH COURT Singamuthu actor Vadivelu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe