/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled_56.jpg)
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3- ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் நடிகர் வடிவேலு போலீசாரின் தடியடி குறித்து சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்...
"உலகத்தில் என்னவோ நடந்துகொண்டிருக்கிறது. கடவுள் எல்லாரையும் சோதிக்கிறார். இந்தச் சோதனையில் ஒட்டுமொத்த மனித இனமும் ஒன்று சேர வேண்டும். போலீஸ் யாரையும் வேண்டுமென்றே அடிப்பதில்லை. சரியான காரணத்தைச் சொன்னால் வெளியே விடுகிறார்கள். அவர்கள் நமக்காக உயிரைப் பணயம் வைத்து சாலைகளில் நின்றுகொண்டு உதவி செய்கிறார்கள். முன்பெல்லாம் கலவரம் நடந்தால்தான் தடியடி நடத்துவார்கள். ஆனால் இப்போது உயிரைக் காப்பாற்ற தடியடி நடந்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருங்கள். கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)