vadivelu Naai Sekar Returns movie trailer released

Advertisment

வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக நடித்து வரும் படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. இப்படத்தை தற்போது சுராஜ் இயக்க ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி ஆனந்தராஜ் உள்ளிட்டோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கையில், நாய்களை கடத்தி வியாபாரம் செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருப்பது போல் தெரிகிறது. மேலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்தது மட்டுமல்லாமல் கொஞ்சம் ஆக்ஷனையும் இணைத்துள்ளார்கள் என்பதை உணர முடிகிறது. இதில் வரும் 'ஆக்ஷன் பிளாக் ஸ்டார்ட் ஆகிடுச்சு, காமெடியன்ஸ்லாம் கொஞ்சம் தள்ளிப் போங்க" என்ற வசனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் வருகிற 9ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.