/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/53_26.jpg)
வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக நடித்து வரும் படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. இப்படத்தை தற்போது சுராஜ் இயக்க ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி ஆனந்தராஜ் உள்ளிட்டோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 9ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் 'அப்பத்தா' பாடலின் வீடியோ சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்போது ரிலீசுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ளதால் விரைவில் டீசர், ட்ரைலர் உள்ளிட்ட அப்டேட்டுகளை படக்குழு அடுத்தடுத்து வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகும் 'மாமன்னன்' படத்தில் வடிவேலு நடித்துள்ளார். மேலும் தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் 'சந்திரமுகி 2' படத்திலும் நடித்து வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)