/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/161_16.jpg)
வடிவேலு நீண்ட இடைவெளிக்குப்பிறகு கதாநாயகனாக நடித்து வரும் படம்'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. இப்படத்தை தற்போது சுராஜ் இயக்க ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி ஆனந்தராஜ் உள்ளிட்டோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லைகாநிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் 'அப்பத்தா' பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை வடிவேலு பாட, பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். இப்பாடலில் வரும் 'கால் வைக்கும் இடமெல்லாமே கன்னி வெடி, கான்ட்ரவர்சியை தாண்டினேன் ப்ளான் பண்ணி' என வரும் வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகும் 'மாமன்னன்' படத்தில் வடிவேலுநடிக்கிறார். மேலும்தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் 'சந்திரமுகி 2' படத்திலும்நடித்து வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)