Advertisment

உதயநிதி ஸ்டாலினுடன் வடிவேலு திடீர் சந்திப்பு!

vadivelu

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு, ‘24ஆம் புலிகேசி’ பட விவகாரம் தொடர்பாக விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது இந்த விவகாரம் சுமுகமாக தீர்க்கப்பட்டதையடுத்து, தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸிற்கு வடிவேலு தயாராகிவருகிறார். சுராஜ் இயக்கத்தில் ஒரு படம் உட்பட அடுத்தடுத்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கவுள்ளார்.

Advertisment

சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக வடிவேலு சந்தித்தார். அந்த சந்திப்பில் இருவரும் நீண்ட நேரம் மனம்விட்டு பேசினர்.

Advertisment

திரைப்படங்களில் நடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கத்திற்குப் பிறகு பேட்டியளித்த வடிவேலு, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க இருப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

actor Vadivelu Udhayanidhi Stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe