Advertisment

வடிவேலுவின் அட்ராசிட்டியால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்பு

vadivelu making fun at 'chandramukhi 2' shooting spot

'சந்திரமுகி 2', 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு மற்றும் ராதிகா நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு மைசூரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பின் போது வடிவேலு அட்ராசிட்டி பண்ணும் வீடியோவை வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் வடிவேலு ஒரு பிரபல படத்தில் தான் செய்த காமெடியை நடித்து காண்பிக்கிறார். அவரது காமெடியை பார்த்து அருகில் இருந்த ராகவா லாரன்ஸ் மற்றும் வீடியோ எடுத்த ராதிகா ரசித்து சிரிக்கின்றனர். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ராதிகா வெளியிட்டு வடிவேலு செய்யும் காமெடி எந்த படத்தில் இடம்பெறும் என ரசிகர்களை யூகிக்க சொல்லி குறிப்பிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் இந்த காமெடி விஜய்யின் சுறா படத்தில் இடம்பெறும் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

radikaa sarathkumar actor Vadivelu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe